கறுப்புத் திரை – ஜா.தீபா

ஜோர்டான் பீல் வெகு காலமாக அமெரிக்கர்களின் செல்லப்பிள்ளையாக இருக்கிறார். தொலைக்காட்சிகளில் நகைச்சுவை நிகழ்ச்சிகளைப் பல வருடங்களாகத் தொடந்து வெற்றிகரமாக இயக்கியும், நடித்தும் வந்தவர், 2008ஆம் ஆண்டு அவற்றைவிட்டு விலகினார். ஆனாலும், தனது தயாரிப்பு நிறுவனம் வழியாகத் தொடர்ந்து நகைச்சுவை நிகழ்ச்சிகளைத் தொடர்ந்தபடி இருக்கிறார். அதோடு இயக்குநர் ஸ்பைக் லீ இயக்கிய ‘BLACKKKLANSMAN’ படத்தின் இணைத் தயாரிப்பாளரும் ஆனார்.

இவருடைய அப்பா கறுப்பினத்தைச் சேர்ந்தவர். அம்மா வெள்ளை இனத்தைச் சேர்ந்தவர். தனது ஏழாம் வயதில் கடைசியாக அப்பாவைப் பார்க்கிறார் ஜோர்டான் பீல். அப்பா தங்களை விட்டுப் போனபின்பு அம்மாவுடன் வளர்கிறார்.

ஜோர்டான் பீலுக்குத் திரைக்கதைகள் அமைப்பது விருப்பமான ஒன்று. ஒரு திரைப்படத்தை எழுதி இயக்க வேண்டுமென்று யோசித்தவர், அது நகைச்சுவைப் படமாக இருக்கக் கூடாது எனவும் முடிவு செய்கிறார். இயல்பிலேயே த்ரில்லர் வகை நாவல்களின் ரசிகரான பீல், இதுவரை இயக்கிய மூன்று படங்களையும் த்ரில்லர் வகையிலேயே தந்துள்ளார். இவரது படங்கள் மற்ற  த்ரில்லர் வகைகளிலிருந்து வேறுபட்டவையே.

முதல் படமான ‘Get out’ வெளிவந்த உடனேயே பெரும் அளவில் வரவேற்பைப் பெற்றது. 2017ஆம் ஆண்டின் சிறந்த படங்களுள் ஒன்றாகவும், வணிக ரீதியாகப் பெரும் வசூலைப் பெற்ற படமாகவும் குறிப்பிடப்பட்டது. அதோடு அந்த வருடத்தின் சிறந்த திரைக்கதைக்கான ஆஸ்கர் விருதும் பீலுக்கு வழங்கப்பட்டது. இத்தனை வருடங்களாக நாம் பார்த்த ஜோர்டான் பீலிடம் இருந்து இப்படியொரு திரைப்படமா என்று வியந்தவர்கள் அதிகம். ‘Get out’ படத்தின் கதை மட்டுமல்ல, அதைத் திரைப்படமாக்கிய விதமும், அதில் அவர் நமக்குச் சொல்லித் தருகிற பாடமும் கூட முக்கியமானவை. க்றிஸ் வாஷிங்டன் என்கிற கறுப்பினத்தைச் சேர்ந்த இளைஞன் வெள்ளை இனப் பெண்ணான ரோஸ் என்பவளைக் காதலிக்கிறான். க்றிஸுக்குத் தனது குடும்பத்தாரையும் உறவினர்களையும் அறிமுகம் செய்ய நினைத்த ரோஸ், அவனைத் தனது ஊருக்கு அழைக்கிறாள். “உன்னுடைய குடும்பத்தாருக்கு நான் கறுப்பினத்தவன் என்பது தெரியுமா?” என்று க்றிஸ் கேட்கிறான். “தெரியுமே… அவர்கள் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள்” என உறுதி தந்து அழைத்துப் போகிறாள்.

 

This content is locked. Only accessible for Registered Users.

If your aren't registered yet, then

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger
error: Content is protected !!