சமீபகாலமாக அம்பேத்கர் சிந்தனை, குறிப்பாக ஜனநாயகம் குறித்த அவரின் கருத்துகள் குறித்துப் பரவலான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. ஜனநாயக நிறுவனங்கள் தங்களின் தன்னாட்சியையும் ஒருமைப்பாட்டையும் சீர்குலைக்க பெருகிவரும் அழுத்தங்களையும் சவால்களையும் எதிர்கொள்ளும் ஒரு முக்கியமான காலகட்டத்தில் இந்த மறுமலர்ச்சி நிகழ்கிறது. இச்சூழலில், சாதி ஒழிப்புக்கும் ஜனநாயகக் கட்டமைப்புகளை ஆழப்படுத்துவதற்கும் இடையே உள்ள பிரிக்க முடியாத தொடர்பு குறித்த அம்பேத்கரின் வலியுறுத்தல் மிகவும் பொருத்தமானதாகிறது. அவரது சிந்தனையின் மையத்தில், சாதியை அழிப்பதற்கு நிறுவனங்களை ஜனநாயகப்படுத்துவதும் நவீனமயமாக்குவதும் அவசியம். அதே நேரத்தில் சாதியை அழிப்பதே எந்தவோர் அர்த்தமுள்ள ஜனநாயகமயமாக்கலுக்கும் அடித்தளமாகும் என்ற இரு தரப்பு உறவும் இருக்கிறது. இந்த வரையறையின்படி, சாதி என்பது அனைத்துச் சமூக மற்றும் அரசியல் நிறுவனங்களிலும் ஊடுருவியுள்ள ஒரு பரவலான கருத்தியல் அமைப்பாகும்.
எனவே, சாதியை ஒழிப்பதற்கு ஒரு ‘ஒழிப்புவாத’ அணுகுமுறை (Abolitionist Approach) தேவைப்படுகிறது. அது, கல்வி நிறுவனங்கள் மற்றும் தலித் நலனைப் பாதுகாக்கும் பொறுப்புள்ள அரசு அமைப்புகள் போன்ற, பெரும்பாலும் முற்போக்கானவையாகக் கருதப்படும் நிறுவனங்களை ஜனநாயகப்படுத்த முற்படுகிறது. உதாரணமாக, கல்வி நிறுவனங்கள், விலக்குதல், பாகுபாடு மற்றும் கலாசார மேலாதிக்கம் மூலம் அடிக்கடி சாதிப் படிநிலைகளை மீள்உற்பத்தி செய்கின்றன. விளிம்புநிலைச் சமூகங்களுக்காக வடிவமைக்கப்பட்ட நல நிறுவனங்கள் கட்டுப்பாடு மற்றும் அலட்சிய அதிகாரத்தின் இடங்களாக மாறுகின்றன. எனவே, சாதியை ஒழிப்பதற்கு, அதைத் தக்கவைத்திருந்த நிறுவனங்களை அழிப்பது அல்லது முழுமையாக மாற்றுவது அவசியமாகிறது. இந்தப் புரிதல், சீர்திருத்தவாத உள்ளடக்குதலுக்கு (Reformist Inclusion) அப்பால் கட்டமைப்பு மாற்றத்தைக் குறித்துச் சிந்திக்கத் தூண்டுகிறது. வரலாற்று ரீதியாகச் சாதிய தர்க்கங்களால் வடிவமைக்கப்பட்ட நிறுவனங்களை உள்ளிருந்தே சீர்திருத்த முடியுமா, அல்லது அவற்றுக்கு இன்னும் அடிப்படையான மறுசீரமைப்பு தேவையா என்ற முக்கியமான கேள்வியையும் இது எழுப்புகிறது.

This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then


