வரலாற்றுக்கு முன்பு ஒலித்த குரல்

1903ஆம் ஆண்டு வாக்கில், மிசிசிபியில் உள்ள டுட்விலர் தொடர்வண்டி நிலையத்தில் டபிள்யூ. சி.ஹேண்டி (W.C.Handy) தொடர்வண்டிக்காகக் காத்திருந்தார். அப்போது அந்த இரயில் நிலையத்தின் நடைமேடையிலிருந்து முன்பின் கேட்டிராத ஒரு விசித்திரமான ஒலி எழும்பியது. அவருக்கு அருகில் கந்தல் ஆடை அணிந்த ஓர் ஆப்பிரிக்க-அமெரிக்கக் கலைஞன் கையில் கிட்டாருடன் அமர்ந்திருந்தான். வழக்கமான முறையில் விரல்களால் மீட்டுவதற்குப் பதிலாக, அவன் ஒரு கத்தியின் பின்புறத்தை கிட்டாரின் நரம்புகள் மீது இழுத்து வாசித்துக் கொண்டிருந்தான். அந்த கித்தார் அழுகையையும், கூச்சலையும், அவனது சொந்தக் குரலுக்கான பதிலையும் ஒரே கணத்தில் வளைத்து வெளிப்படுத்தியது. “Goin’ where the Southern cross’ the Dog” எனும் ஒற்றை வரியை மட்டும் பாடி, அதை மூன்று முறை திரும்பத் திரும்பச் சொன்னான். மேற்கத்திய இசை பயின்ற ஹேண்டி, பிற்காலத்தில் அதைத் “தான் கேட்டதிலேயே மிக விசித்திரமான இசை” என்று குறிப்பிட்டார். வரலாற்றின் பக்கங்களிலிருந்து அந்தப் பெயர் தெரியாத கலைஞன் மறைந்துபோனான்; ஆனால், அவன் எழுப்பிய ஒலி மறையவில்லை. ஹேண்டி தான் கேட்ட அந்த ஒலியைத் தழுவி, ப்ளூஸ் இசைக்குறிப்புகளைப் பதிப்பித்து, பிற்காலத்தில் “ப்ளூஸ் இசையின் தந்தை” என்று புகழப்பட்டார்.

எனினும், அந்தத் தொடர்வண்டி நிலைய நடைமேடையில் அவராக அந்த இசையைக் கண்டறிந்துவிடவில்லை. ஆனால், அந்தச் சந்திப்பு ஏன் வரலாற்று முக்கியத்துவம் பெறுகிறது என்றால், ஓர் இசை உலகம் மற்றோர் இசை உலகத்தின் இருப்பை முதன்முதலில் உணர்ந்துகொண்ட அபூர்வத் தருணம் அது! காகிதத்தில் எழுதப்படும் இசை மரபு வாய்மொழி இசை மரபைச் சந்தித்த தருணம்; முறைசார்ந்த தொழில்முறை இசைக்கலைஞன் பெயர் தெரியா அநாமதேய உழைப்பாளியைச் சந்தித்த தருணம்; ஆப்பிரிக்க-அமெரிக்கச் சமூகங்கள் தலைமுறைகளாகச் செதுக்கி வைத்திருந்த நாதத்தை அமெரிக்க வர்த்தக உலகம் செவிமடுக்கத் தொடங்கிய வரலாற்றுத் தருணம் அது! டுட்விலர் நிலையத்தில் நிகழ்ந்த இந்தச் சந்திப்பே, மிசிசிபி டெல்டா ப்ளூஸ் இசையின் ஆவணப்படுத்தப்பட்ட முதலாவது தருணமாக இன்றளவும் கருதப்படுகிறது.

 

This content is locked. Only accessible for Registered Users.

If your aren't registered yet, then


Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger