1976ஆம் ஆண்டு மே மாதம் 14ஆம் தேதி, தமிழகத்தின் திரையரங்குகளில் ‘அன்னக்கிளி’ என்ற படத்தின் மூலம் 50 ஆண்டுகளுக்கு முன் இளையராஜா எனும் இசை ஆளுமை திரையுலகில் கால்பதித்தார். அது வெறும் ஓர் இசையமைப்பாளரின் அறிமுகம் மட்டுமல்ல; அது தமிழ் சினிமாவின் இசைப் போக்கையே அடியோடு மாற்றியமைத்த ஒரு மகா புரட்சியின் தொடக்கம். ‘அன்னக்கிளி’க்கு முன்பு வரை தமிழ் சினிமாவின் இசை என்பது பெரும்பாலும் கர்நாடக இசையின் தாக்கத்திலோ அல்லது மெல்லிசை மன்னர்களின் மென்மையான பாணியிலோ இருந்தது. கிராமத்துக் கதைகளுக்கும் கூட ஒரு செயற்கையான இசை வடிவமே வழங்கப்பட்டு வந்தது. ஆனால், இளையராஜா அந்த மரபை உடைத்தார். தான் வளர்ந்த மண்ணின் நாட்டார் பாடல்களையும் (Folk), நாட்டுப்புற மெட்டுக்களையும் அப்படியே திரைக்குக் கொண்டுவந்தார். அசல் கிராமிய மெட்டுக்களை எடுத்துக்கொண்டு, அவற்றுக்கு மேற்கத்திய ஆர்கெஸ்ட்ரேஷன் எனும் நவீன சட்டையை அணிவித்தார். நாட்டுப்புற இசையை அதன் ஆதி வடிவம் சிதையாமல், அதே சமயம் ஒரு நவீனத் திரைப்படத்திற்குத் தேவையான பிரமாண்டத்தோடும் தொழில்நுட்ப நேர்த்தியோடும் வழங்க முடியும் என்பதை ‘அன்னக்கிளி’ நிரூபித்தது. “அன்னக்கிளி உன்னைத் தேடுதே”, “மச்சானைப் பார்த்தீங்களா”, “சுத்த சம்பா பச்சை நெல்லு” போன்ற பாடல்கள் ஒலித்தபோது, கிராமப்புற மக்கள் தங்கள் வீட்டு விசேஷங்களில் பாடும் அதே ராகத்தை ஒரு துள்ளலான பின்னணி இசையோடு கேட்டது அவர்களுக்குப் பேரதிர்ச்சியாகவும் பெரும் மகிழ்ச்சியாகவும் இருந்தது.

This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then





