தமிழ்த் திரையுலகின் மாபெரும் நட்சத்திர இசையமைப்பாளரான இளையராஜா, தனது இசை மேதைமையால் தமிழ் இசையில் இருந்த பார்ப்பனிய ஆதிக்கத்தைக் கலைத்ததோடு மட்டுமல்லாமல், பறை போன்ற இசைக்கருவிகள் மீது கட்டமைக்கப்பட்டிருந்த இழிநிலையையும் தகர்த்தெறிந்தார். தனது 83 வயதில், அவருக்கே அவருக்கான மதிப்பையும் மரியாதையும் பாராட்டையும் பதக்கங்களையும் கொடுத்தே ஆகவேண்டும்.
இளையராஜா – பெயரே பிரளயம்
இந்திய சகாப்தத்தின் இசை மாமேதை இளையராஜா என்று சொல்வதே மிகச்சரி. தென்னிந்தியர், குறிப்பாக தமிழர், தமிழ்நாட்டில் இருக்கும் தமிழரோ அல்லது உலகெங்கிலும் வாழும் தமிழரோ தன் வாழ்வில் ராஜாவின் இசையைக் கேட்காமல் இருக்கிறார் என்பது அரிதிலும் அரிதான நிகழ்வுதான். ஆயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்து, 8,000க்கும் அதிகமான பாடல்களை உருவாக்கி, ஐந்து தசாப்தங்களையும் தாண்டி நீளும் தனது இசைப் பயணத்தில் யாரையும் விட அதிகமான வெற்றிப் பாடல்களை வழங்கிய இளையராஜா, நிச்சயம் ஒரு சராசரியான இசையமைப்பாளர் அல்ல – அவர் ஒரு ஜாம்பவான். தமிழ்ச் சமூகத்தில் நிலவும் வலுவான செவிவழி கலாச்சாரச் சூழலில், இளையராஜாவின் பாடல்களும் இசையும் பல சமயங்களில் வலுவான அரசியலையும் எடுத்துரைக்கிறது. மேலும், அவரின் பாடல்கள் சமூக நிகழ்வுகளிலும் சடங்குகளிலும் பிரிக்க முடியாத இடத்தைப் பிடித்துள்ளன. அவை மொழி மற்றும்

This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then





