ஜாதி இனமல்ல
சமீப காலங்களில் Scheduled Castes, Scheduled Tribes ஆகிய ஆங்கில வார்த்தைகளைப் பட்டியலினம், பட்டியலின மக்கள், பழங்குடியினம் எனத் தமிழாக்கிச் சுட்டுவது பரவலாகக் காணப்படுகிறது. பஸ், பைக், கார், மொபைல் போன்ற கணக்கற்ற வேற்றுமொழிச் சொற்களைத் தமிழாக்காத சமூகம், Scheduled Castes என்ற சொற்களின் தமிழாக்கம் ‘ஆதிதிராவிடர்’ அல்ல; அதன் சரியான தமிழாக்கம் பட்டியலினம் என்று கூறி அச்சொல்லைப் பயன்படுத்துகிறது. தமிழாக்கத்தில் இருக்கிற இந்த இரட்டை நிலைப்பாட்டுக்கு அடிப்படைக் காரணம் அவர்களின் சுயஜாதி சார்பாகும். அவ்வாங்கில வார்த்தைகளைத் தமிழாக்கித்தான் பயன்படுத்த விரும்பினால் அவற்றின் சரியான மொழியாக்கம் பட்டியல் / அட்டவணை ஜாதிகள், பட்டியல் / அட்டவணை பழங்குடிகள் என்பதாகும். ‘பட்டியலினம்’, ‘பழங்குடியினம்’ என்பவை தவறான மொழியாக்கம். இந்தத் தவறு தங்களைத் ‘தனித்த இனம்’ (Race) என்றும், ஜாதியை இனம் என்றும் நம்புகின்ற தப்பெண்ணத்திலிருந்தே தோன்றுகிறது. இனமும் ஜாதியும் அடிப்படையிலேயே வெவ்வேறானவை. ஜாதியம் ஓர் உள்ளூரளவிலான (Local) புராண (Myth) வகைமை. இதற்கு மாறாக, இனம் என்பது உலகளாவிய உயிரியலின் (Biology) புறவியல் வகைமை. ஆகவே, புராணத்தை அறிவியலாகக் கற்பனை செய்ய இயலாது! Myth X Biology என்ற முரணான இவ்விரண்டையும் பிரித்தரியக்கூட இயலாத நிலை இருக்கிறதோ எனத் தோன்றுகிறது. முதலில் இனம் என்றால் என்ன என்பதை விளங்கிக்கொள்வோம்.
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then