“மக்களின் மௌனமான உண்மையை உரக்கச் சொல்வதற்காக, அறிவுஜீவி தன்னை அவர்களுக்குச் சற்று முன்னாலோ அல்லது பக்கத்திலோ நிறுத்திக் கொள்ளும் காலம் முடிந்துவிட்டது. அதைவிட முக்கியமாக அதிகார அமைப்புதான் இந்த எளிய மக்களின் அறிவையும் பேச்சையும் முடக்குகிறது, தடை செய்கிறது, செல்லாததாக்குகிறது. எனவே, அறிவுஜீவியின் வேலை இனி மற்றவர்களுக்காகப் பேசுவது அல்ல. மாறாக, தன்னை ஒரு பொருளாகவும், கருவியாகவும் பயன்படுத்தும் அந்த அதிகார வடிவங்களுக்கு எதிராகப் போராடுவதுதான்.”
– மிஷேல் ஃபூக்கோ (1977:102).
வரலாறு என்பது ஒற்றைப் பரிமாணம் கொண்டதன்று; அது பல்லாயிரக்கணக்கான அதிகாரப் புள்ளிகளாலும் முரண்களாலும் கட்டமைக்கப்படும் பன்முகத் தன்மையைக் கொண்டிருப்பதாக வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள். எழுத்து என்பது மேலாதிக்கப் பண்பும், புனிதத் தன்மையும், அதிகார பலமும் மிக்கது என்ற பிம்பத்தை ஆளும் வர்க்கத்தினர் காலங்காலமாகச் சொல்லி வந்துள்ளனர். இதன் விளைவாகவே, ‘ஒடுக்கப்பட்ட சமூகம்’ என்று அடையாளப்படுத்தப்படும் மக்கள், தங்களின் இருப்பை நிலைநிறுத்திக்கொள்ள எழுத்தைக் கைக்கொள்ளத் தொடங்கினர்.

This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then





