“முக் மேம் ராம், பகல் மேம் சூரி” என்றொரு பழமொழி இந்தி மொழியில் உண்டு. இது, “படிப்பது இராமாயணம், இடிப்பது பெருமாள் கோயில்” என்ற தமிழ் பழமொழியைப் போன்றதுதான் என்றாலும், பொருளில் கொஞ்சம் மாறுதல் உண்டு. “முகத்தில் ராமபபக்திப் பொலிவு, இடுப்பிலோ கத்தி” என்பது இதன் பொருள். இந்தப் பழமொழி யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ, ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்களுக்குக் கனகச்சிதமாகப் பொருந்துவதை, அயோத்தி-ராம் லல்லா கோயிலில் (குழந்தை ராமர் கோயில்) நடந்துள்ள உண்டியல் கொள்ளை எடுத்துக்காட்டியிருக்கிறது.
1947க்குப் பின்னர், குறிப்பாக, 1980கள் தொடங்கியே அயோத்தி நேர்மறையான விடயங்களுக்காக ஊடகங்களில் பேசப்பட்டதில்லை. ஆர்.எஸ்.எஸ். முன்னெடுத்துவரும் வெறுப்பு அரசியலின் தேசிய அடையாளமாக அறியப்பட்ட ‘ஸ்தலம்’தான் அயோத்தி. இம்முறை அக்கோயிலில் நடந்த உண்டியல் கொள்ளை, ஆர்.எஸ்.எஸ். பரிவாரத்தின் ‘திருட்டு அரசியலை’ அம்பலப்படுத்தியிருக்கிறது.
இந்தக் கொள்ளை பற்றிய விசாரணை இப்போதுதான் தொடங்கியிருப்பதால், கொள்ளையின் மதிப்பு இன்னும் முழுமையாகத் தெரியவில்லை. எனினும், கொள்ளையடிக்கப்பட்ட உண்டியல் பணம், காணிக்கைப் பொருட்கள் ஆகியவற்றின் மதிப்பு ஏறத்தாழ 200 கோடி ரூபாய் அளவிற்கு இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. சிறப்பு விசாரணைக் குழுவால் கைது செய்யப்பட்டுள்ள எட்டுப் பேரிடமிருந்து இதுவரையிலும் ரொக்கமாக மட்டும் 80 இலட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டிருப்பதில் இருந்து கொள்ளையின் மதிப்பை ஒருவாறு நாம் ஊகித்துக்கொள்ளலாம்.

This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then





