மழை உழுத மண்ணில் பாதங்கள் புதையப் புதைய கல்லறையை வந்தடைந்தான் தாமஸ். சிறிய கோபுரம் போல் எழுப்பப்பட்டிருந்த கொள்ளுத் தாத்தா ரோட்ரிக்கின் சமாதி முகப்பில் விளக்குக் கூண்டுகளும் பக்கவாட்டில் சம்மனசுகள் இறக்கையடிப்பதும் நேர்த்தியாய்ச் செதுக்கப்பட்டிருந்ததை இன்றுதான் கவனித்தான். சிறிது பூச்சு வேலைகள் செய்தால் இப்போதும் புதிது போல் காட்சியளிக்கும் என நினைத்துக் கொண்டான். அதற்குப் பக்கத்திலுள்ள குழியில்தான் சென்ற வாரம் தன் தந்தையை அடக்கம் செய்திருந்தான். வாழும்போதே மௌனியாய்தான் பெரும்பாலான வேளைகளைப் போக்குபவர் என்பதால், துக்கம் தாக்கவில்லை. இல்லையென்றாலும் தாக்கியிருக்காது எனப் பட்டது அவனுக்கு. நிறைய அழிச்சாட்டியங்களும் சில நல்லவையும் அவன் வாழ்வில் அவர் செய்ததுண்டு. “முதல் துரோகம் நான் பிறப்பேன் என்பதை யோசிக்காமல் என் அம்மாவுடன் நீ படுத்துத் தொலைத்தது” என்று அவ்வப்போது திட்டுவான். அது குறித்தும்கூட அவர் புன்னகையைத்தான் தருவாரே தவிர, மல்லுக்கட்டுவதில்லை. அவருக்கு நாற்பத்தேழு வயதானபோது முதல் பிள்ளையாகப் பிறந்தான் தாமஸ். வயதுதான் அவர் மீதான அவனது கோபத்திற்கான வேராக இருந்தது. ஒருவர், தன் கண்ணில் கண்டது முதல் மரிக்கும் காலம்வரையிலும் எப்படித் தாத்தாவாகவே தோன்றி மறையலாம் என்று முணுமுணுத்துக் கொண்டான். மூப்புப் பற்றிய பயம் இளம் பிராயத்திலே ஊன்றிட அவன் தந்தையே காரணமாக இருந்தார். அப்பயம் அவனது தோற்றத்திலும் எதிரொலித்தது.
கல்லறை நிர்வாகி சொல்லி அனுப்பியிருந்த வரிசையில் முன்னும் பின்னுமாக மூன்று குழிகள் முறையாக வேறுபடுத்த இயலாதபடி அமைந்திருந்தன. அதற்கு முன் வரிசையில் கம்பீரமாக இருந்த கல்லறையின் திட்டை ஆராய்ந்தவாறே அமர்ந்தான் தாமஸ்.

This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then


