1
கொலை நடந்த வீட்டில் ஆளில்லை. குறைந்தது இருபத்தைந்து ஆண்டுகள் பழைமை வாய்ந்த பித்தளைப் பூட்டு ஒன்று கதவில் தொங்கியது. தூய்மையும் விசாலமும் நிசப்தமும் உடைய அத்தெரு முற்றுப்பெறுகிற இடத்தில் சிட்டிக்கி ரெட்டி என்று அழைக்கப்படும் குண பூஷண சிட்டா மிட்டா ரெட்டியின் கோட்டைவீடு இருந்தது. பத்து நாட்களுக்கு முன்பு டவுன் இன்ஸ்பெக்டருடன் ஜீப்பில் அங்கு வந்திறங்கியபோது இப்படியான அநாதரவு ஞானகம்பீரத்தின் முகத்தில் அறையவில்லை.
மலை உச்சியில் அங்கங்கு குக்கிக் கிடக்கும் கிராமங்களில் இருந்தெல்லாம் ஆணும் பெண்ணுமாக நூற்றுக்கும் குறையாத ஆட்கள் தெருவிலும், வீட்டுக்கு முன்பும் பீதியை முகங்களில் தேக்கியபடி நின்றிருந்தனர். காவல் வாகனம் தடுமாற்றமில்லாமல் நுழைவதற்குக்கூட அவர்கள் இடம் தரவில்லை. வேடிக்கை பார்த்திடும் உந்தலில் எங்கே இவர்கள் பட்டிக்குள் நுழைந்து தடயங்களை எல்லாம் அழித்திருப்பார்களோ என்று ஞானகம்பீரம் அன்று வருந்தினான்.
ஒரு கோல்டு ஃபிளேக் ஃபில்டரை எடுத்துப் பற்ற வைத்து நிதானமாகப் புகைத்த பிறகு ஞானகம்பீரம் அந்த வீட்டை நன்றாக நோட்டமிட்டான். இடுப்பளவு உயரத்தில் கருங்கற்களால் பலகையடித்து நன்றாகப் பாவி எழுப்பப்பட்டிருந்தது. சதுர வடிவில் கட்டப்பட்ட நாட்டோடு வேய்ந்த பெரியவீடு. படியேறி தாழ்வாரத்தில் நின்றால் கிழக்குப் பார்த்த, வேலைப்பாடுகளுடன் கூடிய பழைய நிலைக்கதவு. வீட்டின் வெளிச்சுவரையும், சன்னல் இறக்கைகளையும் தொட்டபடி தாழ்வாரத்திலேயே வீட்டுவலம் சென்றால், வடக்குப் பார்த்த வீட்டுக் கொல்லைக்கும், மேற்குப் பார்த்த மாட்டுப் பட்டிக்கும், தெற்குப் பார்த்த பண்டகச் சாலைக்கும் அங்கங்கு அமைக்கப்பட்டிருக்கும் படிகளிலே இறங்கிக்கொள்ளலாம். நடுவீட்டில் நான்கு மரத்தூண்களுடன் வானம் நோக்கும் உள்முற்றம். சுற்றிலும் அறைகள். வீட்டுக்குள் நுழைவதைத் தவிர்த்து, வீட்டுக்கொல்லை போன்ற இன்னபிற இடங்களுக்கு நிலத்திலிறங்கி சுற்றிக்கொண்டும் செல்லலாம்.
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then