நிகழ்காலத்து வெய்யில் பறவையாகிறது
அந்நாளில் பூவாசம் அறியாதவள்
தலையில் வெய்யிலை நறுமணமாக்கிச் செல்கிறாள்
ஐஸ் வண்டிக்காரன்
கோடைகாலத்து வெய்யிலைச் சுவையாக்கித் தருகிறான்
மீன் விற்பவன் வெய்யிலை
ஊர் விட்டு ஊர் கொண்டுசெல்கிறான்
மோர் விற்பவள் அந்த வெய்யிலைக்
குளிர்ச்சியாக்கிப் பருகத் தருகிறாள்
பள்ளிக்குச் செல்லும் சிறுவன்
வெய்யிலை விரித்துப் பாடம் படிக்கிறான்
ஊஞ்சலாடும் சிறுமி
வெய்யிலை ஆகாயத்திற்கு நேராகக் கொண்டுசென்று
அதே வேகத்தில் பூமிக்குக் கொண்டுவருகிறாள்
ஆடு மேய்க்கும் இடையன்
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then