11
மன்னன் நந்தன் என்ற வரலாறு பிற்காலத்திலேயே தலைகீழாக்கப்பட்டிருக்கிறது. அவர் நந்தனார் என்ற பண்ணையடிமையாகப் புனையப்பட்டிருக்கிறார். ஆனால், ஆதியிலிருந்தே பண்ணையடிமையாக இருந்தவன் என்ற தொன்மக் கதையே இங்கிருக்கிறது. மையநீரோட்ட கதையாடல்கள் மட்டுமல்ல, மாற்றாக எழுதப்படுவதாகச் சொல்லிக்கொண்ட வரலாறும் இப்பார்வையை ஏற்றே (சிற்சில வேறுபாடுகளோடு) பாடல், நாடகம், கதை, சொற்பொழிவுகள் போன்ற வடிவங்களில் புழங்கிவருகிறது.
வரலாறா, கதையாடலா?
அடிமை என்று கூறுவதால் எழும் தாழ்வு மனப்பான்மை உளவியலுக்கு அஞ்சியே, நந்தனை மன்னன் என்று கூறும் நேரெதிர் முனைக்குச் சென்றுவிட்டனர் என்றே பலரும் கருதிவருவதைப் பார்க்கிறோம். இதன் மூலம் நந்தன் மன்னன் என்று கூறுவதை வரலாற்றுச் சான்றுகள் சார்ந்ததாகப் பாராமல், ஓர் எதிர்வினை என்ற அர்த்தம் தந்துவிடவே விரும்புகின்றனர். மேலும், இதனைத் தமிழகத்தில் தலையெடுத்திருக்கும் ஆண்ட பரம்பரை அரசியலோடு இணைத்துப் பார்க்கும் போக்கினையும் எதிர்கொள்கிறோம். ஆனால், நந்தன் என்ற பெயரில் ஒருவர் மன்னனாக இருந்திருக்க முடியாது, இருந்திருந்தாலும் அதனை ‘அரசியல் சரித்தன்மை’ கருதி சொல்லக் கூடாது என்று கருதுவோமானால் அதுதான் வரலாறுக்குச் செய்யும் துரோகம்.
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then