அண்மையில் ‘நந்தன்’ என்றொரு திரைப்படம் வெளியாகியிருக்கிறது. ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கும் நந்தனார் கதையை மறுத்து, மாமன்னன் நந்தன் என்னும் மாற்று வரலாறாக இத்தொடரை எழுதிவரும் நிலையில் நந்தன் திரைப்படத்தையும், அதன் சித்திரிப்பையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. அந்த வகையில் இந்த அத்தியாயம் ‘நந்தன்’ படம் குறித்த விமர்சனமாக அமையும். எனவே, வாசகர்கள் இந்த அத்தியாயத்தை இடையீடாகக் கருதி ஏற்றுக்கொள்ளும்படி வேண்டுகிறேன்.
பின்புலமும் கதையும்
உள்ளாட்சித் தேர்தலில் இட ஒதுக்கீடு பின்பற்றப்படுகிறது. அவற்றில் தலித்துகள் மட்டுமே போட்டியிடும் இடங்களும் அடங்கும். ஆனால், தலித்துகளின் இத்தகைய அரசியல் தலைமையை ஏற்றுக்கொள்ள விரும்பாத நிலை இங்கிருக்கிறது. குறிப்பாக, கிராமங்களில் அது வெளிப்படையாக நிலைகொண்டிருக்கிறது. தலித்துகள் மட்டுமே போட்டியிடக்கூடிய இடங்கள் ஒதுக்கப்படும்போது அங்கிருக்கும் ஆதிக்க வகுப்பினர் சட்டத்தை மீற முடியாமலும், அதேவேளையில் தங்களின் அதிகாரத்தைத் தக்க வைத்துக்கொள்ளும் பொருட்டும் ஒரு தந்திரத்தை மேற்கொள்கின்றனர். அதாவது, தங்களுக்கு ‘அடங்கிய’ தலித் ஒருவரைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் சட்டத்திற்குக் கணக்குக் காட்டிவிட்டு, நடைமுறையில் எல்லா அதிகாரங்களையும் தாங்களே மேற்கொள்கின்றனர். பரவலாக இது நடைமுறையில் இருந்தும் கூட பேசாப் பொருளாகவே இருந்துவந்தது. ‘நந்தன்’ திரைப்படம் இந்தப் பின்புலத்தைக் கதையாக்கியிருக்கிறது.
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then