14
சைவ இலக்கியங்களில் நந்தன் அல்லது நந்தனார் பெயர் முதன்முதலாக எங்கு இடம்பெறுகிறது?
கட்டார் துழாயன் தாமரையா னென்றிவர் காண்பரிய
சிட்டார்பலிதேர்ந் தையம்வவ்வாய் செய்கலைவவ்வுதியே
நட்டார்நடுவே நந்தனாள நல்வினையாலுயர்ந்த
கொட் டாறுடுத்த தண்வயல்சூழ் கொச்சையமர்ந்தவனே (1.63.11)
திருப்பிரமபுரம் தலம் மீது திருஞானசம்பந்தர் பாடியதாக அறியப்படும் பதிகத்திலுள்ள பாடல் இது. மூன்றாவது வரியில் ‘நந்தனாள’ என்ற சொல் இடம்பெற்றுள்ளது. இதனை நந்தன் + ஆள என்று பிரிக்கலாம். சம்பந்தர் பாடல்களின் வழக்கப்படி இரண்டு அடிகள் தல வர்ணனையாகவும் இரண்டு அடிகள் இறைவன் பெருமையாகவும் அமைந்துள்ளன. அதன்படி தல வர்ணனையில் நந்தன் என்ற பெயர் இடம்பெற்றுள்ளது. “நட்டார் நடுவே நந்தன் ஆள நல்வினையாலுயர்ந்த” என்பதற்கு ஆற்றின் நடுவே பராசர முனிவன் மச்ச கத்தியைக் கூடி பழி நீங்கிப் போகும்படி என்று உரை தரப்படுகிறது. இதன்படி பார்த்தால் பராசரன் என்ற முனிவனுக்கு நந்தன் என்ற பெயர் இருக்கிறது. பராசரன் என்பவன் பிரமனின் மகனாவான். நந்தன் என்ற பெயர் சைவ மரபில் உயர்வான பொருளில் கையாளப்பட்டது என்பதற்கு இதுவே உதாரணம். நந்தனுடைய பெயர் இத்தகைய பொருளில் இடம்பெற்றுவந்த காலத்தில்தான், பிற்கால நந்தனார் கதைக்கான மூலம் என்று சொல்லப்படுகிற சுந்தரரின் திருத்தொண்டத்தொகையில் நந்தனார் பெயர் இடம்பெறவில்லை என்பதையும் பார்க்கிறோம். அவரின் திருத்தொண்டத்தொகையில் தனி அடியார் அறுபத்து மூவர் சரிதக்குறிப்பும், தொகையடியார் ஒன்பதின்மர் குறிப்பும் கூறப்பட்டுள்ளன. “செம்மையே திருநாளைப் போவார்க்கு மடியேன்” என்ற ஒருவரி இடம்பெறுகிறது. அதாவது நந்தன் என்ற பெயர் இல்லை. திருநாளைப்போவார் என்ற பெயர்கூட காரணப் பெயராகத் தெரிகிறதே ஒழிய இயற்பெயராகத் தெரியவில்லை. வேறு விவரங்களும் இல்லை. மொத்தத்தில் இதில் அவரின் சாதி குறிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then