தண்ணீர் சொட்டும் தலைமுடியுடன் குளியலறைக்கு வெளியே வரும்போதெல்லாம் அம்மா அவளை நன்றாகத் திட்டித்தீர்ப்பாள். ஆனால், இம்முறை அப்படியொன்றும் நடக்கவில்லை. பீரோவிலிருந்து ஒரு கவர் எடுத்து அம்மா அவனிடம் நீட்டினாள். அதன்மீது புதுச் சட்டையணிந்து ஸ்பைடர்மேனைப் போல வானத்தில் பறந்து வருகிற ஸ்டைலான பையன் ஒருவனின் படம் இருந்தது. அந்தப் பொட்டலத்துக்குள் ஒரு புதுச் சட்டையிருக்கும் என்று அவனால் கண்டிப்பாகச் சொல்ல முடியவில்லை. சில சமயம் கவர் மட்டும் புதிதாக இருக்கும். அம்மா வேலை செய்யும் ஏதாவது பணக்காரர் வீட்டுப் பையன்கள் போட்டுச் சலித்துப்போன பழைய நிக்கரோ, சட்டையோதான் உள்ளேயிருக்கும். அப்படிப்பட்ட ஏராளமான உடைகள் அவனிடமிருந்தன.
“புதுசா?” அவன் அம்மாவைப் பார்த்தான்.
“தொறந்து பாரு” என்று சொல்லிக்கொண்டு பவுடர் டின்னிலிருந்து கொஞ்சம் பவுடர் எடுத்து உள்ளங்கையில் தூவினான்.
அதன் விலையைப் பார்த்ததும் அதிர்ச்சியுற்றான். இவ்வளவு உசத்தியான சட்டை அவன் வகுப்பிலுள்ள பெரிய பணக்காரனான ஜோஹன் கூட போட்டுப் பார்த்ததில்லை.
இவ்வளவு விலையுயர்ந்த சட்டையைக் கட்டாயமாக அம்மா வாங்கியிருக்க மாட்டாள். அடர்நீல நிக்கர். சட்டையின் முன் பக்கத்தில் தவிட்டு நிறத்தில் நீண்ட கோடுகள் நான்கு. ஆஃப் வைட்டில் அதைப் பார்க்கவே நல்ல அழகு.
அதெல்லாம் போகட்டும். இந்தப் பாக்கெட்டில் தைத்து வைத்திருக்கிற ஆள் யாரு பார்த்தீங்களா, ஸ்பைடர் மேன்!
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then