காணாமல் போய் விடுவேனோ என்ற அச்சத்தில்
என்னை பீரோவில் வைத்துப்பூட்டி
வீட்டு வெளிக்கதவையும்
மறவாமல் பூட்டிக்கொண்டு கிளம்பினேன்
என் மீது அவ்வளவு நம்பிக்கை
அல்லது அவநம்பிக்கை
திரும்பி வந்து பார்த்தபோது
இல்லாமல் போயிருந்தேன்
இதற்காக இத்தனை ஆர்ப்பாட்டம்
செய்திருக்க வேண்டியதில்லை
என இப்போது உணர்கிறேன்
அடுத்தமுறை
எதற்குள்ளும் என்னைப் பூட்டிவைக்காமல்
தெரு திண்ணையில் அமர வைத்துப் போனாலே
பத்திரமாய் இருப்பேன் போலிருக்கிறது.
பாதுகாப்பு
ஸ்ரீநேசன்