தனக்கு முலையூட்டியவளையும் தன் மகனுக்கு முலையூட்டுபவளையும் தழல் வெளிச்சத்தில் கண்ட கரியன், அவர்தம் கண்களில் தெரிந்த தவிக்கும் பாவைகளை காணத் தவறவில்லை; தாயின் முகத்தில் கூடுதல் பயிர்ப்பு;...
ஒரே பாய்ச்சலில் சில ஆண்டுகளைத் தாண்டிவிடுகிறது காலம்; இளங்காற்றுக்கு ஆலோலம் போட்ட சிறிய கன்றுகள் எல்லாம் அணைப்புக்கு அடங்காத பெரிய மரங்களாகிவிட்டன; புழுதியில் விளையாடிக்கொண்டிருந்த முதிரா...
நத்தைக் கறிக்கு மிளகு அரைக்கும் பெண்டுகள் ஊரையே மணக்கவிடுகிறார்கள்; தொண்டையில் இறங்கும் உமிழ்நீரின் பெருக்கை யாராலும் நிறுத்த முடியவில்லை பாரேன்; அதோ… வாசலில் படுத்திருக்கும் நாய்களின் நாக்குகள்...
மாட்டுக்கொம்பை ரத்தத்தில் தோய்த்து ஊர் எல்லையில் நட்டு வைத்துப் போயிருந்தார்கள். எங்களை அச்சுறுத்தும் குறிப்பு அது. அந்தக் கொம்புகள் அடுத்ததாக எங்கள் குடல்களைச் சரியச் செய்யும் என்ற...
வேட்டை நாயின் கண்களில் ஆடும் தழலை வெறித்துக்கொண்டிருந்தான் கரியன்; திரும்பத் திரும்ப அவனுடைய மனத்திரையில் ஓடிக்கொண்டிருந்தன இரண்டு குதிரைகள்; சருகுகளில் தெறித்திருந்த உறைந்த குருதியில் செந்நாய்கள் நாக்கைப்...
எங்கோ மலையுச்சியிலிருந்து ஓநாயின் குரல் கேட்கிறது. வானெங்கும் நிறைந்திருக்கும் நிலவு வெளிச்சத்தில் நின்று மோவாயைத் தூக்கி ஊளையிடும் அது தன் மூதாதையர்களை வருந்தி அழைப்பதுபோல் உள்ளது. மறவோன்...