தாபாயுதங்கள்
நாம் முத்தத்தின் உச்சத்தில் இருக்கிறோம்
உன் முத்தம் என்னையும்
என் முத்தம் உன்னையும்…
மொழிக்குள் அடங்கா காதல்ரசங்களை
உன்னுள் ஊற்றி
நான் கோர்க்கக் கோர்க்க
நீ அந்தரத்தில் பந்துருள்கிறாய்
களிகொண்டு களமாட
போர்வீரன்
மின்னும் தன் கேடயம்
வாள் வேல்களைத்
தடவித் தடவிக் கூர்த்தீட்டுவதுபோல்
முண்டியடித்துக்கொண்டு
முன் நகர்கின்றன
என் தாபாயுதங்கள்
நிராயுதபானியாக நிற்கும்
நீ கேட்கிறாய்
‘கடைசியாக எப்போது
முத்தம் இட்டாய்’ என்று
கற்றறிந்த வித்தைகளே
போர்க்களத்தில் கைக்கொடுக்க
கற்றுக்கற்றுத்தான் இங்கே
வித்தைகளே வசமாகின்றன
அன்பே வா
இறுதி முத்தத்திலிருந்தே
ஏகுதல் செய்வோம்.
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then