அல்காரிதம்களால் சமூக நீதி கிடைத்துவிடாது!

கி. நெபுலா

திரைப்பிரபலம் என்பதற்காகவே அவர்கள் மீது பெரும் ஈர்ப்பு கொண்டு, அவர்களை அரசியலில் வெற்றிபெறச் செய்யும் தமிழ்நாட்டில் சாதி, பாலியல் வன்கொடுமைகள் போன்ற சமூக அவலங்களுக்கு எதிராக அணிதிரளாமல், வாக்குகளை மட்டும் அளித்துவிட்டு அவரவர் அடுத்த வேலைக்குச் சென்றுவிடுவதுதான் மக்கள் எழுச்சி என்று நம்பப்படுகிறது. ஜனநாயக நாட்டில் வாக்கு அரசியல் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது என்றாலும், இந்தியாவில் சாதிய – மதப் பிரிவினைகள் கொண்ட சமூகத்தில் வாக்குகள் வியாபாரமாகிவிட்டன.

இதில் புதிய வியாபாரிகள் யார் என்பதில்தான் மாற்றம் இருக்கிறதே தவிர, முதலீடாக விளங்கும் பெரும்பான்மை எளிய மக்களின் நம்பிக்கையும், விளிம்புநிலையும், அரசியல் கட்சிகளின் பொய் வாக்குறுதிகளும் மாறவில்லை. இப்படியான சூழலில் சமூகவலைத்தளத்தின் வருகை ஒரு புதிய காலகட்டத்திற்குள் நம்மை அழைத்துச் சென்றுள்ளது, அதன் ஆகச் சிறந்த நிகழ்வே கரப்பான்பூச்சி ஜனதா கட்சியாகும்.

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி என்பது என்ன?

கடந்த மே 15ஆம் தேதி உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்யகாந்த் ஷர்மா, “நமது சமூகத்தில் அரசு கட்டமைப்பைத் தாக்கும் ஒட்டுண்ணிகள், கரப்பான் பூச்சிகளைப் போல உள்ளனர்… அவர்களுக்கு எந்த வேலையும் கிடைப்பதில்லை, எந்தவொரு தொழிலும்  இல்லாத இளைஞர்கள்.  இவர்களில் சிலர் ஊடகவியலாளர்களாகவோ, சமூக ஊடகச் செயல்பாட்டாளர்களாகவோ, தகவல் அறியும் உரிமைச் (RTI) சட்ட ஆர்வலர்களாகவோ அல்லது பிற வகையான ஆர்வலர்களாகவோ மாறி, அனைவரையும் தாக்கும் செயல்களில் ஈடுபடத் தொடங்குகிறார்கள்” என்று கூறினார்.

 

This content is locked. Only accessible for Registered Users.

If your aren't registered yet, then


Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger