ஸ்டாலின் ராஜாங்கம் தொடர்ச்சியாகத் தமிழ்த் திரைப்படங்களின் சாதிய அரசியல் பண்பாட்டு வெளிகளை ஆராய்பவராக இருக்கிறார். அவரது ஆரிய உதடும் உனது, திராவிட உதடும் உனது என்ற திரைக்கட்டுரை நூல் 2008இல் வெளியானது. அன்றிலிருந்து அவர் எழுதி வந்துள்ள திரைப்பார்வைகள் சீரான காலத்தில் நூலாக்கம் கண்டுள்ளன. இப்பொருண்மையில் மொத்தம் நான்கு நூல்களை அவர் எழுதியுள்ளார். சமூகத்தைப் பிரதிபலிக்கும் கலை எனப் பார்க்கப்படும் திரைப்படங்கள், சமூகத்தைச் செலுத்துவதற்கான புதிய கதையாடல்களைக் காலந்தோறும் உற்பத்தி செய்து, வெகுமக்களின் ஆதரவு பெற்ற ஊடகமாகவே அவை உருவான காலந்தொட்டு முதன்மையாய் இருந்து வருகின்றன.
தமிழ்த் திரைப்படங்கள், சமூக வழக்கங்கள் வழக்கொழிந்து விடக்கூடாது என இயங்குவதைப் பார்க்க முடியும். குறிப்பிட்ட சில சினிமாக்கள் மரபைக் காத்தலை நேரடியாகப் போதிப்பவையாக இருந்தாலும், பெரும்பாலான படங்கள் பிரச்சாரத் தன்மையின்றிக் கதையோட்டத்தின் ஊடே கருத்தை ஆழ விதைத்துவிடும் வகையிலானவை. இதுவே திரைத் தாக்கத்தின் பலம். இந்தப் பலத்தின் வழி மரபான, மாற்ற இடந்தராத சித்தாந்தங்களைத் திரைக்கலை பற்றிக்கொண்டிருப்பது மாறவேண்டும் என்பதற்கான நியாயமான கேள்விகளும் தர்க்கங்களும் நிறைந்தவையே ஸ்டாலினின் சினிமாசார் எழுத்துகளின் மையம்.

This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then





