இளையராஜா: இசையுலகம் இட்டுக்கொண்ட கையெழுத்து

ஞா.குருசாமி

 

1990களின் இறுதியில் கவிதைகள் எழுதத் தொடங்கியிருந்தேன். மரபுக்கவிதைகளை வெளியிட்டுக்கொண்டிருந்த பல இதழ்களில் எனது வெண்பாவும் விருத்தமும் வெளிவர ஆரம்பித்தன. கல்லூரிப் படிப்பு தொடங்கியபோது சினிமாவுக்குப் பாடல் எழுதும் ஆசை துளிர்விட்டது. எவ்வளவோ முயன்றும் என்னால் அதிலிருந்து அப்போது விடுபட முடியவில்லை. விளைவு, அரசு மாலைநேர இசைக் கல்லூரியில் ‘வாய்ப்பாட்டு’ சேர்ந்தேன். வகுப்பில் நண்பர்கள் குரலை சுதிக்குப் பழக்கிக்கொண்டிருந்தபோது நான் மெட்டின் மீட்டருக்கு வார்த்தைகளைத் தேடிக்கொண்டிருந்தேன். பழைய மெட்டுகளுக்குப் புதியதாகப் பாடல்களை எழுதிப் பாடிப் பார்ப்பேன். பேராசிரியர்கள் அய்யனார், சம்பூரணம் ஆகியோர் என்னை உற்சாகப்படுத்திக்கொண்டே இருந்தார்கள். பலரது கீர்த்தனைகள் எமக்கு மாதிரியாகக் கொடுக்கப்பட்டாலும் அதோடு ஒருவித அந்நியத்தன்மை இருந்துகொண்டே இருந்தது. பிணைத்துக்கொள்ள இயலவில்லை. அப்போதைய எனது தேடலுக்கு வியப்பாகவும் புதிராகவும் எளிமையாகவும் இருந்தவர் இளையராஜா. ஒவ்வொரு பாடலின் இசையிலும் அதுவரை இல்லாத புதுமை ஒன்றை அவர் வைத்திருந்தது பிரபஞ்ச வெளியாக விரிந்தது. அந்த அதிசயத்துக்குள் திளைத்து அவரது மெட்டுகளுக்கு வார்த்தைகளைத் தேடிய சுகானுபவம் அலாதியானவை. தற்போது கறுப்பர் கலை இலக்கியங்கள் குறித்து வாசித்தும் எழுதியும் வரும் சூழலில் இளையராஜாவின் இசையைக் கறுப்பர் இசையோடு இணைத்துப் பார்க்கத் தோன்றியது. இளையராஜாவின் ‘அன்னக்கிளி’ வெளியாகி ஐம்பதாண்டுகளைத் தொட்டிருக்கிற நேரத்தில் அவரது இசை நுணுக்கங்களை யோசிப்பதே தரிசனத்தின் பரவசமாக இருக்கிறது.

 

This content is locked. Only accessible for Registered Users.

If your aren't registered yet, then


Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger