மேற்கத்திய செவ்வியல் உலகில், இசை இரண்டு தனித்த வகைப்பாடுகளைக் கொண்டுள்ளது. ஒன்று, ‘நிரல் இசை’ (Program Music); மற்றொன்று, ‘முழுமையான இசை’ (Absolute Music).
கதைகளையும் கருத்துகளையும் விவரிக்கும் இசை முதல் வகையைச் சேர்ந்தது. எவ்விதமான முன் தீர்மானிக்கப்பட்ட கருத்துமின்றி உங்களது மனதை / அறிவை வந்தடையும் வகையில் உருவாக்கப்படும் இசையாக்கம் இரண்டாவது வகையைச் சேர்ந்தது. இசை வடிவிலான சிந்தனைகளை விவரிப்பதாக மட்டுமே இசை திகழ வேண்டும் என்ற நம்பிக்கை இது.
இளையராஜாவின் திரையிசை ஆக்கங்கள், அடிப்படையில் நிரல் இசை வகையைச் சேர்ந்தவை. ஏனென்றால், முன்னரே முடிவு செய்யப்பட்ட சூழல் அல்லது காட்சி அல்லது உணர்வுகளுக்கே அவர் இசை அமைக்கிறார்.

This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then





