கோடை விடுமுறை முடிந்து திரும்பியிருந்தேன்
வீட்டுக்குள் ஏதோ ஒரு பிரிவு
ஏதோ ஓர் ஏமாற்று ஏற்பாடாகியிருந்ததை
உணர்ந்தேன்
அதை முற்பட்டறிய
சுற்றும் முற்றும் பார்த்தும் பலனில்லை
முற்றத்தில் ஒரேயொரு செடியில் பூத்திருந்த
ஒரே ஒரு பூ உதிர்ந்ததுபோல
கலக்கமுற்றேன்
வழக்கமாக
எதுவென்று தெரியாதவற்றைக் குணப்படுத்தும்
சாளரத்திடமே போனேன்
அது விலகி விலகிப் போய்
வீதியின் அந்தப் பக்கம் நின்றது
என் வீடு
எதிர்த்த வீட்டில் பூட்டப்பட்டிருந்தது.