இசை ஆக்கம் – இளையராஜாவின் தனித் தடம் (ராஜாவின் இசையமைப்புப் பாணி குறித்த விரிவான அலசல்)

இரவி ஆனந்த் நாராயண், தமிழில்: இரவிச்சந்திரன்

மேற்கத்திய செவ்வியல் உலகில், இசை இரண்டு தனித்த வகைப்பாடுகளைக் கொண்டுள்ளது. ஒன்று, ‘நிரல் இசை’ (Program Music); மற்றொன்று, ‘முழுமையான இசை’ (Absolute Music).

கதைகளையும் கருத்துகளையும் விவரிக்கும் இசை முதல் வகையைச் சேர்ந்தது. எவ்விதமான முன் தீர்மானிக்கப்பட்ட கருத்துமின்றி உங்களது மனதை / அறிவை வந்தடையும் வகையில் உருவாக்கப்படும் இசையாக்கம் இரண்டாவது வகையைச் சேர்ந்தது. இசை வடிவிலான சிந்தனைகளை விவரிப்பதாக மட்டுமே இசை திகழ வேண்டும் என்ற நம்பிக்கை இது.

இளையராஜாவின் திரையிசை ஆக்கங்கள், அடிப்படையில் நிரல் இசை வகையைச் சேர்ந்தவை. ஏனென்றால், முன்னரே முடிவு செய்யப்பட்ட சூழல் அல்லது காட்சி அல்லது உணர்வுகளுக்கே அவர் இசை அமைக்கிறார்.

திரைப்படங்களில் இரண்டு வகைப்பாடுகள் உண்டு. பாடலுக்கான இசை ஆக்கங்களைப் படைப்பது மற்றும் நிறைவு செய்யப்பட்ட திரைப்படத்திற்குப் பின்னணி இசையைப் படைப்பது. திரைத்துறை மொழியில் இது மறு ஒலிப்பதிவு (Re-Recording) என்று அழைக்கப்படுகிறது.

பாடல் இசை (Song Music), ராகம் அமைத்தல் (Tune Composing)

இளையராஜா, இயக்குநர் / தயாரிப்பாளருடன் அமர்கையில், அவரிடம் முழு திரைக்கதையும் விவரிக்கப்படும். அதன் பின், அத்திரைக்கதையில் எங்கெல்லாம் பாடல்களைப் பயன்படுத்தலாம் என்பது குறித்த குறிப்பான பகுதிகளை (cues) அவர்கள் விளக்குவார்கள். அவர்கள் குழப்பமடையும் தருணங்களில் அல்லது பாடலுக்கான இடத்தைத் தீர்மானிக்க முடியாத சமயங்களில், இளையராஜா தனது அனுபவத்திலிருந்து சில ஆலோசனைகளைத் தருவார். சில சமயங்களில் அவர்களின் சந்திப்பு இரண்டு அமர்வுகள் வரை போகும் முதல் அமர்வில் கதை விவரிக்கப்படும். இரண்டாவது அமர்வில், பாடல்களுக்கான ராகங்கள் அமைக்கப்படும்.

 

This content is locked. Only accessible for Registered Users.

If your aren't registered yet, then

 

 

 

 

 

 

 

 

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger