முகஞ்சுழிப்பு
மூக்கடைப்பு
முணுமுணுப்பு
குமட்டல் உமிழ்தல்
பீ என்ற ஒற்றைச்சொல் கேட்டவுடனே
தினம் பேலுகிறவர்களுக்கெல்லாம்
மழையில் கொதக்கொதத்து
வெயிலில் காய்ந்து
புழு முண்டித்
தான் பேண்டதைப் பார்க்கவே
மனம் கூசுகிறது.
வெறுங்காலுடன்
வெறுங்கையுடன்
நரகல்நெடி நாசி புகுந்து நஞ்சுகக்க
கடைக்குக் கடை ஆணுறை
அரசு அக்கறையில்
கண்கள் இறுக மூடி
மூக்கடைத்துச் செல்பவர்களுக்குத்
தெரிய வாய்ப்பில்லை
சிலரின் தலைச்சுமையாய்…
அனைவரின் வயிற்றிலும்
பீ.