Oh go down, Moses,
Way down into Egypt’s land,
Tell old pharaoh,
Let my people go.
காட்சி
அமெரிக்காவின் தென் மாகாணத்தில் உள்ள மேரிலாந்து பகுதிக்கும் டெலவெயர் ஆற்றுக்கும் இடையே உள்ள மரப்பாலத்தில் அவர்கள் காத்திருக்கிறார்கள். கைகளில் துப்பாக்கியுடன் பரபரத்துக்கொண்டிருந்தவர்களின் மனங்களில் இருந்தது ஒரே சிந்தனைதான். ‘மற்ற அடிமைகளைக் கூட விட்டுவிடலாம். ஆனால் அந்தத் துரோகிக்குக் கொடூரமான தண்டனை வழங்க வேண்டும்.’ தூரத்தில் சிறு அசைவு தெரிகிறது. இரட்டைக் குதிரை பூட்டிய வண்டி வருகிறது, நீண்ட அங்கியும் தலையில் தொப்பியும் அணிந்த கனவான் அதை ஓட்டி வருகிறார்.
“எதுக்காக இங்க கூடியிருக்கீங்க, ஏதாவது விஷேசமா?”
“அந்தத் திருடன் மறுபடியும் வந்திருக்கானாம். அதான் மோசஸ். அவனுக்கு ஒரு அதிர்ச்சி கொடுக்கலாம்னு..”
“உங்களால முடியலன்னா சொல்லுங்க, நான் புடிச்சத் தரேன். இப்ப வழி விடுங்க, எனக்கு வியாபாரம் இருக்கு”
“இரு இரு, வண்டியில என்ன இருக்குன்னு காட்டு”
“நான் லூதர் கிராண்ட் பையங்கிறது மறந்து போச்சா”
“சரி சரி கிளம்பு,”
டெலவெயர் ஆற்றங்கரையில் அந்த வண்டி நிற்கிறது. தன் நீண்ட அங்கியையும் தொப்பியையும் நடுங்கிக்கொண்டே கழற்றும் வண்டிக்காரன் உண்மையில் ஆணல்ல, பெண். சோளக் கதிர்களை விலக்கிவிட்டு வண்டிக்குள்ளிருந்து வயதான தம்பதி, இளைஞன், பெண் என நான்கு பேர் இறங்குகின்றனர். 40 வயது மதிக்கத்தக்க அந்தப் பெண் அனைவரையும் ஆற்றுப்படுத்துகிறார்.
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then