எழுத்தாளர் இமையம் : தமிழ்ச் சமூகத்தின் மனசாட்சி – ப.சகதேவன்

கும்பகோணத்து அக்கிரகார வீதிகளிலும் பாண்டிய தேசத்தின் கரிசல் மண்ணிலும் திரிந்துகொண்டிருந்த தமிழ்ப் புனைவிலக்கியம் மிக அரிதாகவே தொண்டை நடுநாட்டிலும், கொங்கு மண்டலத்தின் மேய்ச்சல் பூமியிலும், கீழைக் கடற்கரையின் மணற்பரப்பிலும் தென்பட்டிருக்கிறது. இலக்கியத்தின் மேன்மையை நிலவியல் மட்டுமே தீர்மானிப்பதில்லையென்றாலும் உலகின் மிகச்சிறந்த இலக்கியங்களெல்லாமே நிலவியல் பின்னணியைக் கொண்டவையாகத்தான் இருந்திருக்கின்றன!  நிலவியலின் எந்தவொரு பகுதியையும்விட தமிழ் நிலத்திற்கு இது மிகவும் பொருந்தும். தாங்கள் வாழும் மொத்த நிலத்தையும் ஐந்திணைகளாகப் பகுத்து அவற்றுக்கென முதல், கரு, உரிப் பொருட்களைக் கொடுத்து அங்கு காணப்படும் எல்லா உயிரினங்களிலும் உயிரற்ற இயற்கை வடிவங்களிலும் இந்த அம்சங்களைக் காணுமாறு செய்தது உலக இலக்கியத்திற்குத் தமிழர்கள் அளித்த பெரும் பங்களிப்பு. பண்பாட்டின் பிரிக்க முடியாத அம்சமாக இலக்கியத்தைப் பார்க்கும் முயற்சி இது. ஆனால், இந்தப் பாகுபாடு முழுமையானதும் இல்லை, நிரந்தரமானதும் இல்லை என்கிற உணர்வும் தமிழர்களுக்குத் தோன்றியிருக்கிறது. அதனால்தான் திணைகள் வகுக்கப்பட்ட சமயத்திலேயே திணை மயக்கத்தையும் உருவாக்கி விட்டார்கள் போல.

திணைகள் பொதுமைப்படுத்தப்பட்டவை; திணை மயக்கம் பொதுமைப்படுத்தப்படுவதன் போதாமையைக் குறிப்பது. திணைகளை, நிலங்களை, பருவங்களை, இயற்கை வடிவங்களை நாம் கண்கூடாகப் பார்க்கிறோம். அந்த நிலங்களில் வாழும் மக்களின் வாழ்க்கை அந்த வடிவங்களால் கட்டுப்படுத்தப்படுவதும் நமக்குத் தெரியும். ஆனால், திணை மயக்கம் – ஒரே நிலத்தில் பல்வேறு இயற்கை வடிவங்களும் மனித உணர்வுகளும் கலந்து நிற்கும் கலவையான அனுபவம் – குழப்பத்தைத் தருகிறது. சங்க காலத்தில் இந்தக் குழப்பம் எந்தவிதமான பாதிப்பையும் ஏற்படுத்தாமல் இருந்திருக்கலாம். ஆனால், திணைகளே சாதிகளாக இருக்கும் இக்காலத்தில் திணை மயக்கம் புதிய விளக்கத்தைக் கோருகிறது.

மனமும் மனசாட்சியும்

மனம் என்பதைத் திணையாகவும், மனசாட்சி என்பதைத் திணைமயக்கமாகவும் ஏன் எடுத்துக்கொள்ளக்கூடாது? மனம் என்பது ஓரினத்தின் கூட்டு மனம்தான். செல்வச்செழிப்பு மிகுந்த மருதத் திணையில் வாழும் எல்லோரின் செயல்பாடுகளும் ஊடல் நிமித்தமாகவே இருக்கும் என்பது எந்த அளவுக்கு உண்மையாக இருக்க முடியும்?

பகட்டு, புகழ்பாடல், ஆணாதிக்கம், ஒழுக்கமின்மை முதலியவை சங்க இலக்கியத்தின் ஒருபக்கம் என்றால் நிலையாமை உணர்வு, ஆழ்ந்த பரிவு, எக்கணத்திலும் விழுமியங்களைக் கைவிடாதிருத்தல், நிபந்தனையற்ற அன்பு, மென்மையாக இடித்துரைத்தல் என்பவை அதன்  இன்ன பிற பாகங்களாக இருந்திருக்கின்றன. இப்படித்தான் கூட்டு மனமும் மனசாட்சியும் தமிழ் வரலாற்றில் தொடர்ந்து வெளிப்பட்டு வந்திருக்கின்றன. இதில் தொடர்ச்சியும் உண்டு, தொடர்ச்சி அறுதலும் உண்டு. இது வரலாற்றின் நியதி.

 

This content is locked. Only accessible for Registered Users.

If your aren't registered yet, then

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger
error: Content is protected !!