பிரபஞ்ச உருண்டைகளை
இழுத்துப் பிடித்துக்
கொத்தாகக் கட்டி
தம் தோள்களில் இருத்திக்கொண்டு
அதில் ஒவ்வொன்றாகப்
பிய்த்துத்
தரையில் கிடத்தி
அதன் மேலேறி
நின்றும் குதித்தும்
படார் என்று
அது உடைபடும் சத்தத்தில்
லயித்து இருந்தனர்
இரு குட்டிக்கடவுளர்கள்
நானும் மௌனியும்
சாலையோரம் நின்றிருந்ததைக்
கண்ட கடவுளரில் ஒருவன்
அருகில் வந்து
மௌனியின் மூக்கினைக் கிள்ளிக்
கொஞ்சி
தன் கையிலிருந்த
பிரபஞ்சத்தில் ஒன்றைப்
பரிசளித்து
நகர்ந்தான்
கையளிக்கப்பட்ட
பரிசினைக் கண்டு
பரவசத்தில்
தன் இரு பால்பற்களைக்கொண்டு
கடித்து விளையாடத் தொடங்கினான்
மௌனி
மூன்றாம் கடவுளாக
கடியில் கிரீச்சிடம்
பிரபஞ்சத்தின் சத்தத்தில்
லயிக்கலானோம்
நானும்
ஆகாசமும்
இன்னும் எல்லாமும்….