“ஆத்தா உன் சேல – அந்த ஆகாயத்தப்போல. தொட்டில்கட்டி ஆட, தூளிகட்டித் தூங்க” அந்தக் கலைநிகழ்ச்சியில் பாடகர் கரிசல் கிருஷ்ணசாமி தன்னில் கரைந்து பாடிக்கொண்டிருந்தார்.
மரப்பல்லியாய் உச்சுக்கொட்டி உருகினான் கோபாலு எனும் கோபாலகிருஷ்ணன். பாட்டு முடியும்போது பரவசத்தில் அவனுக்குக் கண்ணீர் வழிந்தது.
“யேய், இது பப்ளிக்டா” கோபாலுவின் தோளைத்தட்டி தேம்பலை நிறுத்த முயற்சித்தான். சாரங்கன்
“எங்கம்மா பாவம்டா”
”எல்லா அம்மாவுந்தே!”
கூட்டம் கலைந்து வெளியில் வந்ததும் “லைட்டா சாப்பிடலாமா சாரங்கா?
கோபால் கூப்பிட்டதும் உடனடியாய் மறுத்தான் சாரங்கன்
இந்த மனநிலையில் அவனோடு பாருக்குள் நுழைந்தால், அவனை மீட்டுக்கொண்டு வருவதற்குள் தானும் நாலைந்து கட்டிங் இறக்க வேண்டியிருக்கும்.
“லேட்டாயிருச்சு கோபாலு, சாப்பாட்டுக் கடைகள மூடிடுவாங்க. பசிக்கிது” வயிறைத் தடவிக் காட்டினான்.
“நானும்தே சாப்டணும், ஒரே ஒரு க்வாட்டர் மட்டும் போட்டுட்டு வந்துருவம்”
“நா வரல. நீ வேணுனா சீக்கிரமா முடிச்சிட்டு வா” முடிவெடுத்தானானால் கோபாலுவை நிறுத்தமுடியாது.
“அஞ்சு நிம்சம். மாப்ளய ஏத்திக்கிட்டு வந்திர்ரேன்” சரக்கை மாப்ளை என்றே விளிப்பான். மலைக்குப் போனாலும் மாமெ மச்சினனோட போகணும்பாங்கள்ல. நெசத்துலதே நமக்கு மாமனுமில்ல மச்சினனுங் கெடையாதே! அவனது மனைவிக்கு உடன்பிறந்த அண்ணந்தம்பி, தகப்பனோ இல்லை என்பதை இப்படித்தான் சொல்லிக்கொள்வான்.
அஞ்சு நிமிசம் எனச் சொன்னால் அரைமணிக்கு குறையாது. உள்ளே போய் இம்சைப்படுவதைவிட, பரபரப்பற்ற இந்த இரவுப்பொழுதின் குளுமையில் காலாறுவது சுகம்.
உண்மையிலேயே கோபாலு அன்பானவன்- தான்.. எல்லோருக்குமே அவனைப் பிடிக்கும். குறிப்பாக கடன்காரர்களுக்கு அவனை ரெம்பவே பிடிக்கும். அத்தனை நாணயஸ்தன். வட்டிக்கு வட்டி கட்டுகிறவனை யாருக்குத்தான் கசக்கும் ?. பாலிடெக்னிக்கில் ’ட்ரிபிள் ஈ’ முடித்து வெளியில் வந்ததும் அவனுக்கென பெரியபெரிய டவர் வேலைகள் காத்திருந்தன. நல்ல மூளைக்காரன், செல்போன் டவர்கள் அறிமுகமாகி வந்த காலம். அவனது ப்ளுபிரிண்ட் ப்ளான் அத்தனை கச்சிதமாய் இருக்கும். கூடுதலாக இம்மி செலவாகாது. அந்த அளவில் ஒரு அலுவலகம் போட்டு ப்ளானிங் ஆபீசராய் இருந்திருந்தால் இத்தனை தொல்லைகளை சம்பாதித்திருக்க முடியாது. அவனுக்கு வேலை தருபவர்களெல்லாம் தம்மிடத்துக்கு அழைத்தார்கள். அங்கேதான் பிழை உருவானது.
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then