நெடுவருடம் கழித்து யாரோ சாட்டிய எண்ணெய்க்காப்புக்குக் குளிர்ந்து நிற்கையில் சொறிந்துகொண்டு போகும் பயணச் செம்மறிகளின் வெண்மயிர்களை அப்பிக்கொண்டு மேலும் மூப்பாகிறது சிதிலக் கழுமரம். செவிகளை விறைக்கிறேன். கழுமரத்தினுள்...
ஊருக்குள் அடங்காமல் சற்றே தூரத்தில் எமது சஞ்சரித்தல் மூர்க்கமாய்ப் பேரன்பைப் பிரசவிக்கும் அவ்வாதி பெரும்புலத்தில் அடர்வன நிழலாய்ப் படர்ந்திருக்கிறேன் எங்கள் மூதாதைகள் கையளித்த கதைகளை அறச்சீற்றத்தோடு பண்ணிசைக்கிறேன்...
முதல் முதலாகப் பருகத் தரப்பட்ட முலையில்தான் சதையின் வாசனை அறிமுகமானது எல்லாவற்றிற்கும் முன்பாக எல்லாவற்றையும் விட மூர்க்கமாக. ஒரு மதிகெட்ட மத்தியானத்தில் அவள் ரவிக்கையைப் போர்த்திக்கொண்டு பாலாடையைக்...
நாமேன் ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு குடியாயிருக்கோம் அதுவா ஒரு ஊருக்கு ஒரு ராஜாதானே இருக்க முடியும் மகனே. வெத்து மயிருகள் மூடப்பட்ட சலூனில் வெட்டுவாங்கிய மயிர்களனைத்தும் மாநாடு...
ஜூலி சிந்தனை தப்பியபடி சாலையோரம் விழுந்துகிடக்கும்போதெல்லாம் சற்று ஈரம் படிந்த சொரசொரப்பான நாக்கில் என் தாடையை நனைத்துக்கொண்டிருப்பாள் ஜூலி. எதையும் யோசிக்க விடாத பசி மயக்கம் யாரோ...
பனைமரங்கள் பறையறையும் காட்டில் தொடைச்சதைகள் நலுங்காமல் நடப்பது தகுமா! எக்காளம் இல்லாத நடை களிப்பாகுமா? எலே பங்காளி நம் முதுகில் ஊறும் உப்புத்தண்ணி குதிகால்...







