சிகண்டி: ஊழிப் பெருவலி – லதா

தமிழில் தொடர்ச்சியாகப் பல நாவல்கள் வெளிவந்தவண்ணம் உள்ளன. ஆனால் இங்கு தமிழ் நாவல்கள் என்பதை ‘தமிழக நாவல்கள்’ எனச் சுருங்கிய அர்த்தத்தில் புரிந்துகொள்ளப் படுவது வருத்தமானது. பொதுவாகவே மலேசிய, சிங்கப்பூர் வட்டாரங்களில் வெளிவரும் நாவல்கள் குறித்த உரையாடல்கள் இந்த வட்டாரங்களைத் தாண்டி விரிவடைவதில்லை என்பதை அடிப்படைக் காரணங்களில் ஒன்றாகச் சொல்ல முடியும்.

‘சிகண்டி’ நாவல் வெளிவந்த ஒருமாத காலத்தில் கிடைத்த உடனடி கவனத்துக்குக் காரணம் நாவலின் களமும் அதன் வகைமையும் எனச் சொல்லலாம்.

இந்நாவலின் வாசிப்பு பல கோணங்களைக் கொண்டது. ஆரம்பநிலை வாசகர்கள் வழக்கமான நவீன நாவல்களின் வாசிப்புபோல அதை அணுகக்கூடும். உலகம் அறியாத தோட்டத்துச் சிறுவனான தீபனின் விடலைப் பருவ வெருட்சி அக இருளில் சிக்கவைக்கிறது. அதிலிருந்து மீள, புற இருளில் தன்னை முழுமையாக ஒப்புக் கொடுக்கிறான். அந்த இருளுக்குத் தன்னைத் தின்னக்கொடுத்துத் தன் அகத்தில் இருக்கும் ஒளியை மீட்கிறான் என வாசிப்பதில் ஒரு சுவாரசியம் இருக்கவே செய்கிறது.

தீபனைக் கருவியாகக் கொண்டு இந்நாவல் ஈபுவின் கதையைச் சொல்வதாக வாசிக்கவும் இந்நாவல் பல சாத்தியங்களைக் கொண்டுள்ளது. உறவுகளை ஆட்படுத்தும் தீவிர பற்றும் அதனால்  ஏற்படும் பொறாமையும் வெறுப்பும்  கவலைகளும் சிதைத்துவிடாத தூய பெண்மையின் கதையாக வாசிக்கலாம். உள்ளத்து அன்பினால் புறத் துன்பங்களின் தாக்கமின்றித் துயரத்தின் சுவடு படியாத புனித பெண்ணாக வளர்கிறாள் சிகண்டி. ஊரே கேலி செய்து ஒதுக்கினாலும் வறுமை வாட்டிலும் புதர்க்காட்டில் பூத்திருக்கும் மலர் போல அகமகிழ்ச்சி உடையவளாக இருக்கிறாள். பண பலமும் அதிகாரப் பலமும் கொண்ட வைட் கோப்ராவை கொடூரமாகக் கொன்று நிலத்தை ஆக்கிரமிப்பவளும் போட்டிமிகுந்த பெரு நகரமொன்றில் தனக்கென ஒரு சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கிக்கொண்டபோதும்  அன்புள்ளமே அவளின் ஆதாரமாக இருக்கிறது. அன்பிலிருந்துதான் அவள் கோபமும் குரூரமும் எழுந்து வருகிறது. பேதமற்ற பேரன்பால் நிஷா, சாரா என்று அவள் வம்சம் தழைக்கிறது. வம்சம் மரபணுக்களால் மட்டும் வளர்வதல்ல என்பதை உணர்த்துகிறாள்.

தீபன், சிகண்டி வழியாகத் தோட்டம் நகரமாக உருவாகும் காலத்தின் பதிவாக, மலேசிய மண்ணில் மூன்று, நான்கு தலைமுறைகள் கடந்தும் உழன்றுகொண்டிருக்கும் அடித்தட்டு தமிழ் மக்களின் பாடாக, அதனதன் நிலைகளில் அதனதன் அறங்களோடு இயங்கும் இவ்வுலக வாழ்வின் அறியவிரும்பாத பக்கங்களைச் சொல்வதாகவும் ‘சிகண்டி’யை வாசிக்கலாம்.

 

This content is locked. Only accessible for Registered Users.

If your aren't registered yet, then

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger
error: Content is protected !!